UAE Tamil Web

அமீரகம்: இந்த வருடத்தின் கடைசி குளிர்கால பவுர்ணமி – எப்போது பார்க்கலாம்..!

Cold Moon

இந்த வருடத்தின் கடைசி பவுர்ணமி நாளை (டிசம்பர் 29) மாலை 5.53 மணிக்கு அமீரகத்தில் தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

அதிகமான இரவுப் பொழுதைக் கொண்ட நேரத்தில் தோன்றுவதாலோ என்னவோ இது கோல்ட் மூன் (Cold Moon) என அழைக்கப்படுகிறது.

பூர்வீக அமெரிக்காவில் இருந்து இந்தப் பெயர் (Cold Moon) மற்ற பகுதிகளுக்கு பரவியதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

நாசாவின் அறிக்கையின்படி பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்களும் இந்த நிகழ்வை தெளிவாகப் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு நிலவின் பிரகாசமானது அடுத்த நாள் அதாவது புதன்கிழமை காலை 8.04 மணிக்கு உச்சத்தை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.