அபுதாபி சுகாதார நிறுவனமான சேஹா, எமிரேட்டில் உள்ள (சேஹாவால் நிர்வகிக்கப்படும்) பொது சுகாதார மையங்களுக்கு வருகைதரும் நோயாளிகள் மற்றும் விசிட்டர்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் கிரீன் பாஸைக் காட்ட வேண்டும் என நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பை மறு அறிவிப்பு வரும் வரையில் ஒத்திவைப்பதாக சேஹா இன்று (செப்டம்பர் 6, 2021) தெரிவித்துள்ளது. அபுதாபியில் உள்ள பொது சுகாதார மையங்களுக்கு வருகைதரும் நோயாளிகள் மற்றும் விசிட்டர்களுக்கு இதற்கு முன்னர் கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளே பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#صحة تعلق تطبيق قرار الحصول على تصريح تطبيق الحصن لنظام المرور الأخضر.#يداً_بيد_نتعافى #وام https://t.co/fyfCAt2fM7 pic.twitter.com/jYAwhYlQDl
— وكالة أنباء الإمارات (@wamnews) September 6, 2021
