UAE Tamil Web

அபுதாபியில் பள்ளி செல்வோருக்கு பிரத்யேக தடுப்பூசி மையங்கள் திறப்பு!

கோடை விடுமுறைக்குப் பின்னர் அபுதாபியில் அடுத்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அபுதாபி கல்வியறிவுத்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பள்ளி செல்வோருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக அவர்களுக்கென பிரத்யேக தடுப்பூசி மையங்களை அபுதாபி சுகாதாரத்துறை 2 இடங்களில் திறந்து வைத்துள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் இந்த பிரத்யேக மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். புதிதாக பள்ளியில் சேர உள்ள மாணவர்கள், ஆசிரியர்களும் எமிரேட்ஸ் ஐ.டி. இல்லாமலேயே தடுப்பூசி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 டோஸ்களுக்கு மத்தியில் 3 வார காலம் இடைவேளி இருக்க வேண்டும் என்பதால் இப்போதே தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இந்த பிரத்யேக தடுப்பூசி மையங்கள் செயல்படும் என அபுதாபி கல்வியறிவுத்துறை தெரிவித்துள்ளது

தடுப்பூசி மையங்கள் அமைந்துள்ள இடங்கள்:

1. மினா சையீத் தடுப்பூசி மையம் (Green Hall), அபுதாபி

2. அல் அய்ன் கன்வென்ஷன் செண்டர் (Green Hall), அல் அய்ன்.

0 Shares
Share via
Copy link