அமீரகத்தில் இன்றளவும் எரிவாயு சிலிண்டர்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் சில UAE குடியிருப்பாளர்கள் தங்கள் மாதாந்திர செலவினங்களில் மிதமான அதிகரிப்பை கண்டு வருகின்றனர் என்று தான் கூறவேண்டும்.
சிலிண்டரின் விலை மற்றும் VAT ஆகியவற்றைத் தவிர்த்து ‘டெலிவரி கட்டணங்களை’ தங்கள் சப்ளையர்கள் சமீபத்தில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர் என்று அமீரகத்தில் வசித்து வரும் வெளிநாட்டினர் கூறுகின்றனர்.
அமீரகத்தில் எரிபொருள் விலைகள் இந்த மே மாதத்தில் குறைந்தாலும், எரிவாயு சிலிண்டர்களை டெலிவேரி செய்யும் ரைடர்கள் இந்த மாதம் டீசல் 4.08 லிட்டராகவும், ஏப்ரலில் 4.02 டிஹெர்ஸாகவும் இருந்ததால் போக்குவரத்து செலவுகள் அதிகமியுள்ளதாக கூறுகின்றனர்.
இந்திய நாட்டவரான ஸ்ரேயா கோஷ் இங்கு 22 கிலோ சிலிண்டரை ஆர்டர் செய்தபோது, அதன் விலை 133.5 திர்ஹம். ஆனால் எரிபொருள் விலை உயர்வு காரணமாக தங்கள் நிறுவனம் கூடுதலாக 10 திர்ஹம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக அந்த டெலிவரி ரைடர் ஸ்ரேயாவிடம் கூறியுள்ளார்.
“எனவே, ஒரு சிலிண்டருக்கு மொத்த பில் 150.5 திர்ஹம் ஆகும்,” என்று அவர் கூறினார். மேலும் “நான் வேறு சில கேஸ் சிலிண்டர் டெலிவரி நிறுவனத்திற்கு மாற திட்டமிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சில குடியிருப்பாளர்கள் குழாய் வழி எரிவாயுவுக்கு மாறுவதற்கான நேரம் இது என்று கூறியுள்ளனர். இது வழக்கமான எரிபொருளை விட சிக்கனமானது என்பதால் அந்த முடிவை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.