UAE Tamil Web

சாலையில் அடிபட்ட நாயை கடிபட்டுக் காப்பாற்றிய டெலிவரி மேன் – வைரல் வீடியோ..!

dog

அமீரகத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியை செய்துவருபவர் பர்வேஸ் ஆலம். நேற்று தனது பணி விஷயமாக அவர் பயணித்துக் கொண்டிருந்த போது தெருவில் நாய் ஒன்று அடிபட்டு சுற்றித் திரிவதைப் பார்த்திருக்கிறார்.

உடனடியாக ஓடிச்சென்று நாயை மீட்க முயற்சிக்கும்போது அந்த நாய் பர்வேசை தாக்கியிருக்கிறது. இருப்பினும், அதனை மீட்டு தனது நிறுவனத்தின் உதவியுடன் காப்பகத்தில் விட்டிருக்கிறார் அவர்.

தன்னுடைய காயங்களைப் பொருட்படுத்தாமல் நாயை மீட்கப் போராடிய பர்வேஸ்-க்கு அவர் பணிபுரியும் நிறுவனமான லெவிக்ளோபல் பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவவே, பலரும் பர்வேஸ் ஆலமை வாழ்த்தி வருகின்றனர்.

dog
0 Shares
Share via
Copy link