UAE Tamil Web

துபாயில் வாடிக்கையாளரை பலாத்காரம் செய்ய முயன்ற டெலிவரிமேன் கைது..!

துபாய் 34 வயதான உணவு டெலிவரிமேன், பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை தாக்கி கற்பழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

துபாய் போலிஸ் பதிவுகளின்படி, பாதிக்கப்பட்ட அப்பெண் பிப்ரவரி 16, 2022 அன்று துபாயில் உள்ள அல் கரூத் பகுதியிலிருந்து ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் டெலிவரிமேன் ஆர்டர் செய்த உணவை வீட்டுக்கு கொண்டுவந்துள்ளார். பணத்தைக் எடுக்க அப்பெண் வீட்டுக்குள்ளே சென்றபோது, ​​​​டெலிவரிமேன் பெண்ணை பின்தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்பெண் கூச்சலிட குடியிருப்பிலிருந்து டெலிவரிமேன் தப்பிச் சென்றுவிட்டார்.

சிஐடி குழுவின் தீவிர விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அந்த டெலிவரிமேன் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குகள் மேலதிக விசாரணைக்காக பொது வழக்கறிஞருக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap