இந்த ஜூன் மாதத்தில் எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியதால், நமது அமீரகத்தில் மின்சார வாகனங்களுக்கான தேவை (EV) அதிவேகமாக வளர்ந்துள்ளது. எண்ணெய் வளம் அதிகம் கொண்டு நமது நாட்டில் தற்போது Electric வகை வாகனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது.
இதுகுறித்து தொழில்துறை நிர்வாகிகள் கூறுகையில், வாகன ஓட்டிகள், குறிப்பாக UAEயின் பல்வேறு எமிரேட்டுகளுக்கு இடையே வழக்கமாக பயணம் செய்பவர்கள், UAEக்குள் புதிய கார் மாடல்கள் வருவதால், EVகளுக்கு அதிகளவில் மாறுகிறார்கள் என்றார்.
New Auto நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெலால் நாஸ்ர், அமீரகத்தில் அதிக எண்ணெய் விலையைக் கருத்தில் கொண்டு EVகள் மிகவும் சிக்கனமானவை என்று வலியுறுத்தினார். EVகள் மூலம் சுற்றுசூழலுக்கு பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
“எரிபொருளுக்காக 2,000 திர்ஹம் செலவழிப்பதற்குப் பதிலாக, புதிய மின்சார வாகனத்திற்கான தவணைகளாக அதே தொகையை நாங்கள் செலுத்தலாம். மேலும், வங்கிகள் மின்சார வாகனங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன, மேலும் அரசாங்கம் மின்சார கார்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது” என்று நாஸ்ர் மேலும் கூறினார்.
எரிபொருள் விலை அதிகரித்த பிறகு EVSக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளதாகவும், உலகச் சந்தைகளில் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.