UAE Tamil Web

அமீரகம் குறித்து தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய பெண்.. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

அபுதாபியில் பொது அமைதிக்கு இடையூறு செய்த பெண் ஒருவரை காவலில் வைக்க அபுதாபி அரசு வழக்குரைஞர் உத்தரவிட்டுள்ளார்.

அபுதாபியில் பொது ஒழுங்கை சீர்குலைத்ததற்காகவும், அரசு அதிகாரிக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததற்காகவும், பெண் காவல்துறை அதிகாரிகளை எதிர்த்ததற்காகவும், இனவெறி மற்றும் நாட்டுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பெண்ணை விசாரணைக்கு முன் காவலில் வைக்க அபுதாபி அரசு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் நபர், ஹோட்டல் ஒன்றில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக அபுதாபி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரிக்கையில், எதிர்த்து பேசியுள்ளார். பின்னர் அவரை சோதனையிட்டபோது ஆடையில் ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது லக்கேஜ்களை சோதனையிட்டதில் ​, கண்காணிப்பு கேமராக்கள், 15 செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அபுதாபி அரசு வழக்குத்துறையில் விசாரிக்கப்பட்டபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

அதில் இருந்து மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்ட பைகள் குறித்து குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap