UAE Tamil Web

எச்சரிக்கை : குழந்தை ஆபாச படம் பார்த்தால் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம்!

குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாச படங்கள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளதோடு அவை கிரிமினல் குற்றமாகவும் கருதப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆபாச படங்களை பரப்பி பணம் பறிக்கும் கும்பல் உலக நாடுகளில் விஷக்கிருமியாய் பரவி இருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகள் சம்மந்தமான ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் ஒருமுறை அமீரக பொது வழக்குத்துறை எச்சரித்துள்ளது. 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் சம்மந்தமான ஆபாச போட்டோ, வீடியோ, வரைபடம் உள்ளிட்ட ஆபாச காட்சிகள் எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இணையதளம் வாயிலாகவோ தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தியோ குழந்தைகள் சம்மந்தமான ஆபாச வீடியோக்களை பெறும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 1,50,000 முதல் 10 லட்சம் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

3 Shares
Share via
Copy link