UAE Tamil Web

பள்ளிப்பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் 1,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் – அபுதாபி காவல்துறை எச்சரிக்கை!

கோடை விடுமுறைக்கு பின்னர் அமீரகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகள் செயல்படாத நிலையில் தற்போது மீண்டும் பள்ளிப்பேருந்துகள் செயல்பட இருக்கின்றன. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறை விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டுள்ளது. அபுதாபியில் பள்ளிப்பேருந்துகள் மாணவர்களை இறக்கிவிட ஏற்றிவிடுவதற்காக நிறுத்தப்படும்போது வாகன ஓட்டிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

New Bus Safety Measures Implemented In Abu Dhabi

பள்ளிப்பேருந்துகளில் ஸ்டாப் சிக்னல் எரியும்போது கட்டாயம் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றும் மீறினால் 1,000 திர்ஹம்ஸ் வரை அபராதமும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 10 கரும்புள்ளிகள் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல பள்ளிப்பேருந்துகள் நிற்கும்போது குறைந்தபட்சம் 5 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 திர்ஹம்ஸ் வரை அபராதமும் 6 கரும்புள்ளிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பேருந்துகளை கண்டால் மாணவர்கள் நலன் கருதி வாகன ஓட்டிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

2 Shares
Share via
Copy link