UAE Tamil Web

“மரங்கள் இந்நாட்டின் பொக்கிஷங்கள்” – மரங்களை வெட்டியவர்களுக்கு 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த அமீரக அரசு..!

TREE

ஷார்ஜா: மரங்களை வெட்டுதல், மண்ணை அரிப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதித்தல் ஆகிய குற்றங்களுக்காக கடந்தாண்டு 28 பேருக்கு தலா 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு பகுதிகளுக்கான ஆணையம் (EPAA) தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

EPAA ன் தலைவர் ஹானா சைஃப் அல் சுவைதி (Hana Saif Al Suwaidi) இதுகுறித்துப் பேசுகையில்,” சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால் வனப்பகுதிகள் அழிக்கப்படுகின்றன. உள்நாட்டு தாவரங்கள் மற்றும் மரங்களைப் பாதுகாப்பது எங்களுடைய கடமையாகும். அவை இந்நாட்டின் பொக்கிஷங்கள்” என்றார்.

இந்த தாவரங்களை அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் மீண்டும் நடவு செய்வதன் மூலம் EPAA அவற்றைப் பாதுகாப்பதாக ஹானா தெரிவித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆணையம் கடந்தாண்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது.