UAE Tamil Web

கார் மோதியதில் படுகாயம்.. படுத்த படுக்கையான 5 வயது சிறுவன்.! 2 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவு

compensation

கார் மோதி விபத்தில் சிக்கியதில் 100 சதவீதம் நிரந்தர ஊனம் ஏற்பட்ட 5 வயது சிறுவனின் குடும்பத்திற்கு, 2 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

- Advertisment -

காப்பீட்டு ஆணையத்தின் காப்பீட்டு சர்ச்சை தீர்வு மற்றும் தீர்மானக் குழு, பொது அமர்வு ஒன்றின் போது இந்த தீர்ப்பை வெளியிட்டது. 2 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பீட்டை கார் ஓட்டுநரின் காரை உள்ளடக்கிய காப்பீட்டு நிறுவனத்திற்கு, ஆசிய குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை செலுத்த உத்தரவிட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 5 வயது சிறுவன் அல் அய்னில் ஒரு குடியிருப்பு பகுதியில் சாலையில் நடந்து கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த கார் சிறுவன் மீது மோதியதோடு மட்டுமல்லாமல் கார் அவன் மீதேறி விட்டது . பின்னர் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் சோகமான விபத்துக்கு வழிவகுத்த காரை இயக்கி வந்தவர், வாகனத்தை பொறுப்பற்ற முறையிலும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது.

விபத்தில் 5 வயது சிறுவனுக்கு மண்டை ஓட்டில் காயம் மற்றும் மூளை பாதிப்பு உட்பட தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் வயிற்று மற்றும் மார்பில் காயங்கள் மற்றும் பல எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன. கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட சிறுவன்100% ஊனம் ஏற்பட்டதால் விபத்துக்குப் பிறகு படுக்கையிலேயே இருக்க நேர்ந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது.

மேலும் சிறுவனின் பரிதாபமான உடல் நிலைக்கு விலையுயர்ந்த சிகிச்சையும், மிகுந்த கவனிப்பும் தேவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அல் அய்ன் போக்குவரத்து நீதிமன்றம் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை குற்றவாளி என கூறி அவருக்கு 4,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்தது.

விபத்தில் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை தீர்மானிக்க, இந்த வழக்கு காப்பீட்டு சர்ச்சை தீர்வு மற்றும் தீர்மானக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சிறுவனின் குடும்பத்திற்காக வாதாடிய வழக்கறிஞரும் சட்ட ஆலோசகருமான ஜமீலா அல் பலுஷி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிறுவனுக்கு ஏற்பட்ட கொடுமையான பாதிப்புகள் மற்றும் தார்மீக சேதங்களுக்கு இழப்பீடாக, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரின் காரை இன்சூரன்ஸ் செய்த நிறுவனம் 10 மில்லியன் திர்ஹம்ஸ் வழங்க உத்தரவிட கோரியது. ஆனால் தீர்மானக் குழு 2 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது’ என்று கூறினார்.