164 எழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2,20,000 திர்ஹம்ஸ் வழங்கிய அமீரகவாசி.

sheikh
Image Credits- Khaleej Times

மறைந்த தேச தந்தையின் நினைவாக:

ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்றுவித்த மறைந்த தந்தையாகிய ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யானின் கொள்கைகளை பின்பற்றும் வண்ணம் அமீரக தொழிலதிபர் கலித் அப்துல்லா யூசுப் 164 ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2,20,000 திர்ஹம்ஸ் வழங்கினார். மேலும் செலவுகளே செய்ய முடியாத நோயாளிகள் இவரின் தயவால் ஷேக் கலிஃபா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கருணை உள்ளம்:

வெவ்வேறு நாடுகளை சேர்ந்த நோயாளிகளின் அவல நிலை குறித்து கேள்வி பட்ட யூசுப் சிகிச்சை செலவுகள் அனைத்தையும் தானே செலுத்த முடிவு செய்தார். மேலும் மறைந்த தேச தந்தை ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் தனது நாட்டிற்கும், மக்களுக்கும், கொள்கைக்கும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் செய்ததை ஒப்பிடும் போது, நான் செய்தது மிகச் சிறிய அளவே ஆகும். இந்த செயலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று மிகுந்த பெருந்தன்மையுடன் யூசுப் கூறினார்.

நன்றிக்கடன்:

அவரால் பயன்பெற்ற நோயாளி ஒருவர் கூறும் போது “ நாங்கள் அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளோம், அவரது அன்பான செயலுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறோம், எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு கைமாறு அளிப்பானாக” என்று கூறினார். மேலும் மருத்துவச் செலவுகளை எவ்வாறு சமாளிப்போம் என்று செய்வதறியாது திகைத்ததாகவும், அந்த நேரத்தில்
இவர் கொடுத்த பணம் எங்களுடைய துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எனவும் கூறினார். ஷேக் கலிஃபா மருத்துவமனை நிர்வாகம் அமீரக தொழிலதிபரிடம் 2,20,000 திர்ஹம்ஸ் காசோலையைப் பெற்றது. இது 160 ஏழை நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை செலவுகளை ஈடு கெட்ட போதுமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...