துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் வாணவேடிக்கைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதனை முன்னிட்டு பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்கவேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய சுப்ரீம் கமிட்டியின் தலைவர் ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்,” குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக துபாய் அரசு தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொய்வில்லாமல் முன்னெடுத்துவருகிறது” என்றார்.
