அமீரகத்தில் நீங்கள் வாகனம் ஓட்டாவிட்டாலும் இந்த மீறலுக்கு அபராதம் விதிக்கப்படும்.!

Dh400 fine for not using zebra crossing and aslo Dh500 fine for not giving way to pedestrians in UAE

அமீரகத்தில் பாதசாரிகளிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சியாக, அஜ்மான் காவல்துறை இன்று (திங்கள்கிழமை) ‘சாலை கடக்கும் போது பாதுகாப்பு’ என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த முயற்சி மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் என்று அஜ்மான் காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறை இயக்குநர் Lt. Col. சைஃப் அப்துல்லா அல் ஃபாலாசி தெரிவித்துள்ளார்.

ஆபத்தான பகுதிகளிலிருந்து சாலைகளைக் கடப்பது, போன்ற பாதசாரிகள் செய்யும் தவறுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறை செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நியமிக்கப்படாத பகுதியில் இருந்து (ஜீப்ரா கிராஸ்ஸிங் அல்லாத பகுதியில் இருந்து) பாதசாரிகள் சாலைகளை கடந்தால் 400 திரகம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த முயற்சியில் பாதசாரிகள் கடக்கும் பாலங்களைப் பயன்படுத்துவது குறித்தும், அபராதங்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்து விளக்குகளை மதிப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த முயற்சி குறிப்பாக வாகன ஓட்டிகளையும் குறிவைக்கிறது. அனைத்து வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாதசாரிகளுக்கு வழி கொடுக்காமல் சென்றால் 500 திரகம் அபராதம் மற்றும் 6 போக்குவரத்து புள்ளிகள் விதிக்கப்படும் என்று அல் ஃபாலாசி குறிப்பிட்டுள்ளார்.

Loading...