துபாயில் அசுத்தமாக நிறுத்திவைக்கப்படும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – துபாய் முனிசிபாலிட்டி எச்சரிக்கை !

Dh500 fine for leaving dirty cars in Dubai ( Photo : Dubai Municipality)

துபாயில் உங்களுடைய கார்களை அசுத்தமாக விட்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று துபாய் முனிசிபாலிட்டி எச்சரிக்கை செய்துள்ளது.

உங்களுடைய அசுத்தமான காரை பார்க்கிங் செய்து விட்டு, விடுமுறை நாட்களை கொண்டாட வெளியில் செல்ல திட்டம் தீட்டி உள்ளீர்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்.

இனி கவனக்குறைவாக இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டால் 500 திரஹம் அபராதம் விதிக்கப்படும், என துபாய் முனிசிபாலிட்டி எச்சரிக்கை செய்துள்ளது.

துபாயில் குடியிருப்பவர்கள் தங்களுடைய கார்களை பொது பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி வைத்துவிட்டு நீண்ட நாட்கள் அதை சுத்தம் செய்யாமல் அசுத்தமாக விட்டு வைத்து பல பகுதிகளுக்கு தங்களுடைய விடுமுறை நாட்களை கொண்டாட சென்று விடுகின்றனர்.

Dubai துபாய் முனிசிபாலிட்டி தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் கூறுகையில்; உங்களுடைய கார்களை அசுத்தமாக நீண்ட நாட்கள் பார்க்கிங் செய்து வைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள், இது நகர தூய்மையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் துபாயின் அழகியல் பண்பை சீர்குலைக்கும் விதமாக அமைகிறது என்று கூறியுள்ளது.

Dubai Municipality Instagram Post

கார் ஓட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை காரை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், தவறினால் அதிகாரிகளால் உங்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

துபாய் முனிசிபாலிடி விதிமுறை படி பறிமுதல் செய்த காரின் உரிமையாளர் உரிய அபராதத்தை செலுத்த துபாய் முனிசிபாலிட்டியை தொடர்பு கொள்ள தவறினால், பறிமுதல் செய்யப்பட்ட கார் ஏலத்தில் விடப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.