UAE Tamil Web

வாகனங்களில் காலாவதியான டயர்களை பயன்படுத்தினால் 500 திர்ஹம்ஸ் அபராதம் – அபுதாபி காவல்துறை எச்சரிக்கை!

அபுதாபியில் வாகன விபத்துகளை குறைக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அபுதாபி வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். வாகனங்களில் காலவதியான டயர்களை மாற்றாமல் தொடர்ந்து ஓட்டி வந்தால் 500 திர்ஹம்ஸ் அபராதத்துடன் 4 கரும்புள்ளிகள் வழங்கப்படும் என அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலவதியான டயர்களால் வாகன விபத்துகளை ஏற்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு டயர்களை வாங்கும்போது காலாவதியாகும் தேதியை முறையாக கண்டறிந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் தரமற்ற டயர்களால் சாலையில் செல்லும் பிற வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது எனவும் அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

7 Shares
Share via
Copy link