UAE Tamil Web

இந்த குற்றத்தில் ஈடுபட்டால் 500,000 திர்ஹம்ஸ் அபராதம், 25 ஆண்டுகள் வரை ஜெயில்.! அமீரக அதிகாரிகள் எச்சரிக்கை..

flag

அமீரக கொடியை எந்த வகையிலாவது தவறாக பயன்படுத்தினாலோ அல்லது அவமதித்தாலோ, 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 500,000 திர்ஹம்ஸ் அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

- Advertisment -

பப்ளிக் பிராசிகியூஷன் தங்களது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சமீபத்திய விழிப்புணர்வு செய்திகளில், அமீரக கொடியை பகிரங்கமாகவோ, பொது இடத்திலோ அல்லது பொதுமக்களுக்கான இடத்திலோ யார் அவமதித்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

யூனியன் கொடியை சேதப்படுத்தும் அல்லது எந்த வகையிலும் அவமதிக்கும் எவருக்கும் 10 ஆண்டுகளுக்கு குறையாமல் மற்றும் 25 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று, யூனியன் கொடி மற்றும் அதன் திருத்தங்கள் குறித்த 1971-ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்டம் எண் 2-இன் பிரிவு (3) கூறுகிறது.

அமீரக கொடியை அவமதிப்பவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமல்லாமல் கூடுதலாக, குறைந்தபட்சம் 500,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மேற்கண்ட சட்டம் கூறுகிறது. யூனியனில் உள்ள எந்தவொரு எமிரேட் உறுப்பினரின் கொடி, எந்த ஜி.சி.சி நாடுகளின் கொடி அல்லது வேறு எந்த நாட்டின் கொடியையும் அவமதிக்கும் எவருக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்று பப்ளிக் பிராசிகியூஷன் கூறியுள்ளது.