சுகாதாரத்திற்கு தீங்கு மற்றும் விதி மீறல்கள் எதிரொலி; தனியார் மருத்துவமனையை 3 மாத காலம் மூடி துபாய் அரசு அதிரடி..!!

DHA closes down private hospital in Dubai for three months. (Photo : Gulf News)

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தரங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாததன் எதிரொலியாக துபாயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை மூன்று மாதங்களுக்கு மூட துபாய் சுகாதார ஆணையம் (DHA) அதிரடி உத்தரவிட்டுள்ளது..

தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் மருத்துவமனையில் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல விதிமீறல் நடைமுறைகள் இருப்பதைக் கண்டறிந்த பின்னர் மருத்துவமனை மூடப்பட்டதாக DHA தெரிவித்துள்ளது.

மூடல் குறித்து கருத்து தெரிவித்த DHA, எந்தவொரு சட்ட மீறல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், பொறுப்பான மருத்துவ நடைமுறை கட்டமைப்பிற்குள் செயல்படாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

DHA -ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு மருத்துவமனை இணங்கவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Source: Gulf News

Loading...