UAE Tamil Web

பற்றியெரிந்த படகு.. “Flyboard மூலம் பறந்து தீயை அணைத்த வீரர்கள்”.. துபாய் சிவில் பாதுகாப்பு படையின் சிறப்பம்சமான “Dolphin” – வீடியோ உள்ளே

துபாயில் டோவில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, அல் ஹம்ரியா துறைமுகத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, விபத்து குறித்து தகவல் கிடைத்த 7 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு வந்து படகில் இருந்தவர்களை மீட்டதாக கூறியுள்ளது. நேற்று மதியம் 12.24 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

படகில் எரிந்த பொருட்களில் இருந்து அடர்த்தியான கரும்புகை காணப்பட்டாலும், இந்த தீ சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகாரத்தால் பகிரப்பட்ட புகைப்படங்கள், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடுவதைக் தெளிவாக காட்டியது. டால்பின் (Dolphins) என்று அழைக்கப்படும், சிவில் பாதுகாப்பு படையின் Flyboards கருவிகளை கொண்டு இந்த தீ அணைக்கப்பட்டுள்ளது.

கடந்த் 2017ம் ஆண்டில் முதன்முறையாக வெளியிடப்பட்டபோது, ​​துபாய் அரசாங்கத்தின் ஊடக அலுவலகம், அவசரகால நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் நேரத்தைக் குறைக்க, இந்த Flyboardகளை பயன்படுத்த துவங்கியது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு விளையாட்டிற்காக பல இடங்களில் இந்த Flyboards பயன்படுத்தப்படுகிறது, அமீரகத்தை பொறுத்தவரை தீயணைப்பு கருவியாகவும் இது பயன்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap