துபாயில் மருத்துவ சிகிச்சைக்கு நிதி இன்று அவதிப்பட்டுவந்த நோயாளிகளுக்கு உதவ 7 மில்லியன் திர்ஹம்ஸை துபாய் சுகாதார மையமான (DHA)-க்கு துபாய் இஸ்லாமிக் பேங்க் வழங்கியுள்ளது.
இது குறித்து DHA இன் டைரக்டர் ஜெனரல் அல் கேத்பி, ” நிதிச் சிக்கல்களை சமாளிக்க முடியாதோர்களின் துன்பத்தைத் துடைக்க இந்த நிதி உதவும். இந்த முயற்சிகளை மேற்கொண்ட உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரித்துக்கொள்கிறேன்” என்றார்.
அவர் அல் கேத்பி கூறியதாவது: துபாய் இஸ்லாமிய வங்கி மிக முக்கியமான வங்கிகளில் ஒன்றாகும். அமீரகத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. துபாய் இஸ்லாமிய வங்கியால் வழங்கப்பட்ட 7.6 மில்லியன் திர்ஹம்ஸுக்கும் அதிகமான நிதியுதவியை, புற்று நோயாளிகள் மற்றும் இதய நோயாளின் சிகிச்சைக்காகவும் பராமரிப்புக்காகவும் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் DHA இல் உள்ள சுகாதார நிதி அலுவலகத்தின் இயக்குநர் சலீம் கூறுகையில் துபாய் இஸ்லாமிக் வங்கி போன்று சுகாதாரத் துறையில் தொண்டு மற்றும் மனிதாபிமானப் சேவைகளை மேற்கொள்வதால் நோய்கள் இருந்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படும் பலர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் துபாய் இஸ்லாமிக் வங்கியின் நிர்வாகம், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நிதிச் சுமையைக் குறைக்கும் இந்தக் சேவை மூலம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளது.