அபுதாபியின் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தங்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்க, வட்டியில்லா தவணைகளில் போக்குவரத்து அபராதத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறி குற்றம் செய்த இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அபராதத்தை செலுத்தினால், 35 சதவீத தள்ளுபடியும், ஒரு வருடத்தில் 25 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அபுதாபி காவல்துறை, போக்குவரத்து அபராதம் உள்ள ஓட்டுநர்கள் தங்கள் அபராதத்தை தள்ளுபடியின் கீழ் செலுத்தலாம் என்றும் அமீரகத்தில் உள்ள ஐந்து வங்கிகளின் இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
வங்கிகள்:
- அபுதாபி வணிக வங்கி (ADCB).
- அபுதாபி இஸ்லாமிய வங்கி (ADIB)
- ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி (FAB)
- மஷ்ரெக் அல் இஸ்லாமி
- எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி
சேவையைப் பெற, ஓட்டுநர்கள் இந்த வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் கிரெடிட் கார்டை வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து அபராதத்தை தவணைகளில் செலுத்துவதற்கு, முன்பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்கு மிகாமல் ஒரு காலத்திற்குள், வாகன ஓட்டுநர் வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.
“இந்தச் சேவையானது அபுதாபி காவல்துறையின் சேவை மையங்கள் மற்றும் இணையதளம் மற்றும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் வட்டியும் இன்றி ஒரு வருட தவணையுடன் அபராதம் செலுத்த முடியும்.
வாகன ஓட்டிகள் எளிதாக தவணை முறை வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ஆண்டு முழுவதும் தவணை முறையில் செலுத்துவதன் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் நேரத்தை எளிதாக்குவதை இந்தச் சேவை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.