வீட்டு உதவியாளர்களுக்கு WPS ஆன்லைன் ஊதிய பாதுகாப்பு அமைப்பின் மூலம் வீட்டு தலைவர்கள் சம்பளம் வழங்க வேண்டும் என்று மனித வளங்கள் மற்றும் அமீரக அமைச்சகத்தின் வீட்டுப் பணியாளர் விவகார உதவி துணைச் செயலர் கலீல் கவ்ரி தெரிவித்துள்ளார்.
WPS என்பது அமீரக மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிப் பரிமாற்றம் ஆகும். அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் சம்பளத்தைச் செலுத்தும் முதலாளிகள் இதன் மூலம் வீட்டு உதவியாளர்களுக்கு சம்பளம் அளிக்கலாம்.
மனித வளங்கள் மற்றும் அமீரக அமைச்சகத்தின் வீட்டுப் பணியாளர் விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலர் கலீல் கௌரி, “வீட்டுப் உதவியாளர்கள் மற்றும் அவர்களது முதலாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவே WPS கொண்டுவரப்பட்டுள்ளது. முதலாளிகள், ஊழியர்களுக்கு சம்பளத்தை சரியான நேரத்தில் வழங்கியிருப்பததை நிரூபிக்க இந்த திட்டம் உதவுகிறது. அதே நேரத்தில் வீட்டு உதவியாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தைப் பெற்றுவிட்டதையும் இது உறுதி செய்கிறது. இதனால் வீட்டு வேலை செய்பவர்களுக்கும் அவர்களது முதலாளிகளுக்கும் இடையே நல்ல உறவை உருவாக்கும்,” என்று தெரிவித்தார்.
தனியார் துறைகள் ஊதிய பாதுகாப்பு அமைப்பின் மூலம் முறையான சம்பளத்தை வழங்குவதில் அமீரகம் முன்னோடியாக இருப்பதாக அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2009 இல் செயல்படுத்தப்பட்டதிலிருந்து சர்வதேச தொழிலாளர் அமைப்பால் பாராட்டப்பட்டு வருகிறது. பல நாடுகள் தொழிலாளர்களின் ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.