UAE Tamil Web

“அமீரகத்தில் நீங்களும் நவாப் ஆகலாம்”.. Rolls Royce காரில் வரவேற்பு – வேற Levelலில் உபசரிக்கும் உணவகம் – கட்டணம் எவ்வளவு தெரியுமா?

அமீரகத்தில் பாரம்பரிய பாகிஸ்தானிய உணவுகளை வழங்கும் ஒரு உணவகம் ஒன்று “வேற லெவல்” அனுபவத்தை தரும் விருந்தினை தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றது. அல் நவாபி என்ற அந்த உணவகத்தின் உரிமையாளர் பெயர் ஜான்செப் யாசீன்.

அவர் கூறுகையில், “தங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உண்மையான நவாபி அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். “எங்கள் வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு சவாரியையும் அறிமுகப்படுத்தியுள்ளோம், இது அவர்களுக்கு கூடுதல் நவாபி உணர்வை வழங்குகிறது” என்று ஜான்ஸெப் கூறினார்.

சரி அது என்ன அனுபவம்?

இந்த உணவகத்தில் விருந்துண்ண புக் செய்தால் உங்களை இந்த உணவகத்திற்கு அழைத்து வர விலை உயர்ந்த Rolls Royce கார் வரும். உணவகத்திற்கு வந்திறங்கியதும் நவாபுகளுக்கு அளிக்கப்படும் அதே ராஜ உபசரிப்பு அளிக்கப்படும்.

“இது பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவைக் கொண்டாட விரும்பும் மக்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் அவர்கள் தங்களுக்கு சிறப்புமிக்க நாளில் இன்னும் சிறப்பாக உணர்கிறார்கள்” என்றும் ஜான்செப் மேலும் கூறினார்.

ஆனால் இந்த Rolls Royce சவாரி, உணவருந்த முடிவு செய்யும் அனைத்து விருந்தினர்களுக்கானது அல்ல. இந்த ராஜ சேவையைப் பெற, ஒருவர் 15 அல்லது அதற்கு மேற்பட்ட விருந்தினர்களைக் கொண்ட விருந்து அல்லது நிகழ்வை முன்பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, வார இறுதி நாட்களில் மட்டுமே இந்த சேவை கிடைக்கும்.

பதினைந்து பேர் கொண்ட குழுவிற்கான உணவின் விலை சுமார் 500 முதல் 700 திர்ஹம் வரை இருக்கும் என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap