UAE Tamil Web

இந்த விதி மீறல்களுக்கு டிசம்பர் இறுதி வரை அபராதத்தில் 30% சிறப்பு தள்ளுபடி.! அமீரகத்தில் வெளியான புதிய அறிவிப்பு

rak

சுற்றுச்சூழல் மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களுக்கு ராஸ் அல் கைமா பொதுப்பணித்துறை 30% தள்ளுபடி அறிவித்துள்ளது.

- Advertisment -

இந்த அபராத தள்ளுபடி ‘ராகிப்’(Raqhib) சுற்றுச்சூழல் ரோந்துகளால் பதிவு செய்யப்பட்ட அனைத்து மீறல்களுக்கும் பொருந்தும். இந்த சிறப்பு தள்ளுபடி டிசம்பர் இறுதி வரை செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை இயக்குநர் ஜெனரல் அகமது அல் ஹம்மாடி இந்த தள்ளுபடி குறித்து கூறும் போது, டிரக் எடை நிலையங்களில் இருந்து தப்பிக்கும் ஓட்டுநர்களுக்கு இந்த அபராத தள்ளுபடி பொருந்தாது. Raqhib ரோந்துப் பணியாளர்கள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 1,134 மீறல்களைப் பதிவு செய்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மீறல்களில் பெரும்பாலானவை சுற்றுலா தளங்கள், கடற்கரைகள் மற்றும் கேம்ப் மண்டலங்களில் பதிவாகியுள்ளன. நாட்டின் மிக உயர்ந்த சிகரமான ஜெபல் ஜெய்ஸிலும், அல் மமுரா மற்றும் அல் முயிரீத் பகுதிகளிலும் பெரும்பாலான மீறல்கள் பதிவாகியுள்ளன என்றார்.

Raqhib ரோந்து 7 முக்கிய பிராந்தியங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. தூய்மையை உறுதிப்படுத்த நீதித்துறை அதிகாரம் பெற்ற ஆய்வாளர்கள் இந்த தளங்களை தொடர்ந்து கண்காணிக்கின்றனர். குடியிருப்பாளர்கள் சட்டவிரோத மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்களை பார்த்தால் பொதுப்பணித்துறையின் டோல் ஃப்ரீ ஹாட்லைன் 8008118 அல்லது ஸ்மார்ட் ஆப் வழியே புகாரளிக்கலாம் என்றும் நினைவூட்டினார்.