இனி பிளாஸ்டிக் பாட்டில்கள் கீழே இருப்பதைக் கண்டால் அவற்றை மறுசுழற்சி செய்யும் பொழுது டிஸ்கவுண்ட் கூப்பன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஸ் அல் கைமாவில் ஒரு புதிய பசுமை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அலுமினிய கேன்களை ‘ரிவர்ஸ் வென்டிங் மெஷின்’ (RVM) மூலம் பொதுமக்கள் அவற்றை சுழற்சி செய்யும் போதெல்லாம் சில வெகுமதிகளை வழங்குகிறது.
சுத்தமான தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பார்க்லோவால் இயக்கப்படும், இந்த விற்பனை இயந்திரங்கள் ராஸ் அல் கைமா பொருளாதார மண்டலத்தில் (ரேகேஸ்) நிறுவப்பட்டுள்ளன, இது மறுசுழற்சித் தொழிலுக்கு ஆதரவளிக்க அதிகமான மக்களை ஊக்குவிக்கிறது.
RVMகள் மூலம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை வைப்பதன் மூலம், குடியிருப்பாளர்கள் உணவு அல்லது விநியோக சேவைகளுக்கான தள்ளுபடி வவுச்சர்களைப் பெறலாம்.
அல் ஹம்ரா தொழில்துறை மண்டலத்தில் அமைந்துள்ள அதன் ராஸ் அல் கைமா தயாரிப்பு பிரிவில், ஸ்பார்க்லோ நிறுவனம், குடியிருப்பு சமூகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற இடங்களில் நிறுவப்படும் RVMகளை அசெம்பிள் செய்யும்.
கழிவு மாசுபாட்டின் தீங்கான விளைவுகளை மக்கள் ஏற்கனவே அறிந்திருப்பதால் நாங்கள் மறுசுழற்சி கல்வியின் மூலம் எளிதான மற்றும் மகிழ்ச்சியான நடைமுறையினை மக்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் உதவ விளைகின்றோம்.
மறுசுழற்சியை சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றவும் மற்றும் பிளாஸ்டிக் என்னும் வேரினை அடியோடு அகற்றவும் என்று ஸ்பார்க்லோ நிறுவனர் மாக்சிம் கப்லெவிச் கூறினார்.
Rakez இன் குழு தலைமை நிர்வாக அதிகாரி ராமி ஜல்லாட் கூறும்பொழுது “சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை வழங்கும் எங்கள் வளர்ந்து வரும் புதுமையான நிறுவனங்களுக்கு மற்றொரு பசுமை சாம்பியனை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
சமூகத்தின் உதவியுடன் உலகை பசுமை கூடமாக மாற்றுவது ஸ்பார்க்லோவின் குறிக்கோள். அவர்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது மற்றும் அவர்களின் முன்னோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார்.
சாதாரணமாக கீழே இருக்கும் பாட்டில்களை ரீ சைக்கிளிங் மிஷினில் போட சொன்னால் பத்தில் இரண்டு பேர் மட்டுமே அந்த வேலையை செய்யும் மனப்பான்மையை பெறுவார்கள்.
ஆனால் தள்ளுபடி என்று கூறும் பொழுது தனக்கு ஏதேனும் லாபம் கிடைக்குமே என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகப்படியான பிளாஸ்டிக் பாட்டிலை மெஷினில் போட வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே நிறுவனத்தின் முயற்சி மக்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகின்றது.
இனி வருங்காலத்தில் அரபு நாட்டில் பிளாஸ்டிக் இன் பயன்பாடு குறையும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.