UAE Tamil Web

அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு செல்லும்போது முன் அனுமதி பெறாமல் எவ்வளவு பணத்தினை எடுத்துச்செல்லலாம்?

NAT-Dubai-Customs-lists-

உலகத்தின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று துபாய் சர்வதேச விமான நிலையம். கொரோனா காலத்திலும் இந்த விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் இவ்விமான நிலையத்தினை வந்தடைகின்றனர்.

துபாய் விமான நிலைய அதிகாரிகளின் கனிவான உபசரிப்பும் விரைவான சேவையும் காரணமாக பயணிகளின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகின்றன. அதே நேரத்தில் கடத்தல் காரர்கள் மற்றும் சட்ட வரைமுறைகளை மீறும் பயணிகளை கண்காணித்து கைது செய்வதிலும் துபாய் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிறிதும் சுணக்கம் காட்டுவதில்லை.

குழப்பங்களற்ற பாதுகாப்பான பயணத்தினை அனைவரும் மேற்கொள்ளும் பொருட்டு பயணிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை துபாய் கஸ்டம்ஸ் தனது இணையதளம் மூலமாக அவ்வப்போது அறிவுருத்திவருகிறது.

சமீபத்தில் துபாய் கஸ்டம்ஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது. அதில் அமீரகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமீரகம் வருவோர் எவ்வளவு அறிவிக்கப்படாத (undeclared) பணத்தினை எடுத்துச் செல்லலாம்? என்பதை தெரிவித்துள்ளது.

அதென்ன அறிவிக்கப்படாத பணம்?

அதாவது அமீரகம் வரும்/ அமீரகத்திலிருந்து பிற நாடுகளுக்குச் செல்லும் 18 வயதிற்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் 60,000 திர்ஹம்ஸ் வரையில் பணத்தினை எடுத்துச் செல்லலாம்.

ஒருவேளை 60,000 திர்ஹம்ஸ்க்கு அதிகமாக மதிப்புள்ள பணம்/காசோலை/ஆபரணங்கள் ஆகியவற்றை பயணத்தின்போது எடுத்துச் சென்றால் உங்களிடம் இருக்கும் பொருட்களின் மதிப்பு குறித்து நீங்கள் அதிகாரிகளிடம் அறிவிக்கவேண்டும்.

18 வயதிற்குக் குறைவான வயதுடைய பயணிகள் வைத்திருக்கும் பொருட்களின் மதிப்பு அவர்களது பாதுகாப்பாலரின் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும்.

அதேபோல, பயணத்தின் போது கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியல், கஸ்டம்ஸ் டியூட்டி, வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலையும் துபாய் கஸ்டம்ஸ் வெளியிட்டுள்ளது.

கஸ்டம்ஸ் டியூட்டி, வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல்: 3000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள தனிப்பட்ட உபயோகத்திற்கான பரிசுப்பொருட்கள், சிகரெட்கள் (அதிகபட்சம் 40), சிகார்கள் (அதிகபட்சம் 50), டொபாக்கோ (அதிகபட்சம் 500 கிராம்).

விதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல செல்லப்பிராணிகள், நாற்றுகள், மூவி கேமராக்கள் மற்றும் அது தொடர்புடைய உபகரணங்கள், பிரிண்ட்கள் மற்றும் பிற ஊடகங்கள், ஒப்பனை பொருட்கள், கோழி மற்றும் உறைந்த பறவைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், வயர்லெஸ் சாதனங்கள் மற்றும் ட்ரோன்களை எடுத்துச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து அமீரகத்திற்கு எந்தெந்த பொருட்களை எல்லாம் எடுத்துவரலாம்? எவற்றை எல்லாம் எடுத்துவரக் கூடாது என அமீரக பெடரல் சுங்கத்துறை ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

NAT-Dubai-Customs-lists-
1 Share
Share via
Copy link
Powered by Social Snap