UAE Tamil Web

முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெயில், குறுஞ்செய்திகளைத் திறக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை..!

smartphones,-uae-warning,-hacking,-apple,-samsung,-ios,-android

உலகின் ஏதோ ஓர் மூலையில் உட்கார்ந்துகொண்டு நமது அந்தரங்கத் தகவல்களையும், பணத்தையும் சுருட்டும் ஹேக்கர்கள் நம்மை வீழ்த்துவதற்கு பயன்படுத்தும் ஒரே வழி இணையம் தான். உங்களுக்கு தொடர்ந்து அனுப்பப்படும் மெசேஜ்கள், மின்னஞ்சல்கள் வாயிலாக உங்களுடைய கணினியை அவர்களால் கட்டுப்படுத்த முடியலாம்.

ஆகவே, உங்களுக்கு முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளைத் திறக்க வேண்டாம் என துபாய் காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”உங்களுக்கு முன்பின் தெரியாத சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் இருந்து மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் லிங்குகள் அல்லது அட்டாச்மெண்ட்களை திறக்கவேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

smartphones,-uae-warning,-hacking,-apple,-samsung,-ios,-android
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap