அமீரகத்தில் கோவிட்-19 தொற்று நோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி 15 முதல் படிப்படியாக நீக்கி வருகிறது.
இந்நிலையில் துபாய்க்கு Gulf Cooperation Council (GCC) நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து விசிட் / டூரிஸ்ட் விசாவில் வரும் பயணிகளுக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதிய வழிமுறையை தெளிவுப்படுத்தியுள்ளது.
துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவன இணையதளத்தில், துபாய்க்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், தடுப்பூசி செலுத்தாத பயணிகளுக்கான PCR சோதனைச் சான்றிதழில் QR குறியீடு இருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவை மையத்திலிருந்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் கொரோனா வைரஸிலிருந்து மீண்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் செல்லுபடியாகும் மருத்துவ சான்றிதழை QR குறியீட்டுடன் வழங்க வேண்டும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
