UAE Tamil Web

அமீரகத்திற்கு விசிட்/டூரிஸ்ட் விசாவில் வரும் பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமா..? விபரம் உள்ளே..!

அமீரகத்தில் கோவிட்-19 தொற்று நோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி 15 முதல் படிப்படியாக நீக்கி வருகிறது.

இந்நிலையில் அமீரகத்திற்கு விசிட் / டூரிஸ்ட் விசாவில் வரும் பயணிகளுக்கு அமீரக விமான நிறுவனங்கள் திருத்தம் செய்யப்பட்ட வழிமுறைகளை தெர்ளிவுப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அபுதாபியின் எதிஹாட் விமான நிறுவன இணையதளத்தில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் விசிட் / டூரிஸ்ட் விசாவில் அபுதாபிக்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் 30 நாட்களுக்குள் கொரோனாவில் இருந்து குணமடைந்ததற்கான அரசு சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தவுடன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அது போன்று, துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவன இணையதளத்தில், துபாய்க்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்தாத பயணிகளுக்கான PCR சோதனைச் சான்றிதழில் QR குறியீடு இருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவை மையத்திலிருந்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் கொரோனா வைரஸிலிருந்து மீண்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் செல்லுபடியாகும் மருத்துவ சான்றிதழை QR குறியீட்டுடன் வழங்க வேண்டும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Gulf Cooperation Council (GCC) நாடுகளான அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து இருந்து துபாய்க்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் இப்புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

3 Shares
Share via
Copy link