UAE Tamil Web

தினமும் சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போடுபவரா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதிங்க..! – அமீரக தொலைத்தொடர்புத்துறை வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ..!

smartphones,-uae-warning,-hacking,-apple,-samsung,-ios,-android

காலையில் எழுந்து பேஸ்டும் பிரஷையும் எடுப்பதற்கு முன்னரே செல்போனில் செல்பி எடுக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர்களை எச்சரித்திருக்கிறது அமீரக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.

குட் மார்னிங் ஹேவ் ய நைஸ் டே…வில் ஆரம்பித்து அன்றைய தினம் முழுவதும் செய்த அத்தனை அழிச்சாட்டியங்களையும் கிளிக் செய்து சமூக வலைத்தளங்களில் உடனடியாக பகிரும் பழக்கம் இன்றைய தலைமுறை மட்டுமல்ல சில “பெரிய தலைகளுக்கே” இருக்கிறது என்பதே உண்மை.

ஆனால், யாரல்லாம் உங்களது புகைப்படங்களை/பதிவுகளைப் படிக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்குமாறு அமீரக தொலைத்தொடர்பு ஆணையம் வீடியோ மூலமாக எச்சரித்துள்ளது.

சுய தகவல்கள், பணிபுரியும் இடங்கள் போன்றவை குறித்த தகவல்களை இணையத்தில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறும், ஏனெனில் இணையத்தை மோசமான காரியத்திற்காக பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் என ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆகவே, அடுத்தமுறை சமூக வலைத்தளங்களில் நுழையும்போது கொஞ்சம் உஷாராக இருங்கள். இல்லையேல் என்ன..என்ன.. ஐட்டங்களோ.. 12B பிளாட்டினிலே… என பாட்டுப்பாட ஆள் வந்துடுவிடுவார்.

 

smartphones,-uae-warning,-hacking,-apple,-samsung,-ios,-android
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap