UAE Tamil Web

அமீரகவாசிகளே…Hepatitis B-னா என்னான்னு தெரியுமா?

உலக Hepatitis B தினத்தை முன்னிட்டு அந்த நோய் குறித்து அமீரக வாசிகளிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 47% பேருக்கு Hepatitis B என்றால் என்னவென்றே தெரியவில்லை. நோய் குறித்து விழிப்புணர்வு பெறாதது அமீரக மருத்துவத்துறையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமீரகவாசிகளிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் நோய் குறித்து 84% பேருக்கு முறையான விழிப்புணர்வு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. 85% பேருக்கு இந்த நோயில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள் தெரியவில்லை என்றும் 92% பேர் இந்த நோயில் இருந்து மீளவே முடியாது எனவும் எண்ணியுள்ளனர்.

The causes and concerns that are brought about by Hepatitis B
Credit : Aster Clinic

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பகுதிகளில் மட்டும் 15.5 மில்லியன் மக்கள் Hepatitis B நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமீரக மக்கள் தொகையை 1 – 1.5% பேர் இந்த நோயால் அவதியடைந்து வருகின்றனர்

நோயை உரிய நேரத்தில் கண்டறியாவிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்பதால் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட பல்வேறு முயற்சிகளை அமீரக அரசு கையாண்டு வருகிறது.

உலகம் முழுவதும் 2030க்குள் Hepatitis B நோய் பாதிப்பை 90% ஆகவும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை 65% ஆக குறைக்க உலக சுகாதார நிறுவனமும் முயற்சி செய்து வருகிறது.

90% of hepatitis cases, 65% hepatitis deaths preventable by 2030
Credit : News Medical

Hepatitis B என்றால் என்ன?

Hepatitis A மற்றும் B என இரண்டு வகைகளில் ஏற்படுகின்றது.  Hepatitis Aவை விட Hepatitis B மிகவும் பயங்கரமானதாகும். ஏனெனில்,  Hepatitis B முக்கியமாக மனிதர்களின்  கல்லீரலிலைப் பாதிக்கிறது. Hepatitis வைரஸ் அசுத்தமான தண்ணீரின்  மூலம் அதிகமாக பரவுகிறது. சிலருக்கு, இந்த தொற்று நீண்ட நேரம் நீடித்த போதும் அந்த நபரால் அதைக் கண்டுபிடிக்க இயலாது, அத்தகைய சூழலில் அது நாள்பட்ட ஹெபடைடிஸ் ( chronic hepatitis) என்று அழைக்கப்படுகிறது.

எப்படி பரவும்?

Hapatitis B முக்கியமாக மனிதனின்  ஸ்பூட்டம் , சிறுநீர், விந்து, இரத்தம், யோனி ஆகியவற்றில் ஏற்படும் தொற்றுகளின் காரணமாய் பரவுகிறது.  ஒரே ஊசியில் போதை மருந்துகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்பவர்களுக்கும்,  ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களோடு உடல் உறவைக் கொள்பவர்களுக்கும் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்பவர்களிடயே  இந்த நோய் தொற்று எளிதில் பரவுகிறது.

Hepatitis B -யின் அறிகுறிகள்
  • அதிக சோர்வு.
  • வாந்தி மற்றும் வயிற்று வலி.
  • பாதிக்கப்பட்ட நபரின் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக  மாறுதல்
  • சிகப்பு  அடர் நிற சிறுநீர்.
  • காய்ச்சல்.
  • தலைவலி மற்றும் குமட்டல்.
  • பாதிக்கப்பட்ட  நபரின்  உடலில் அதிக அரிப்பு ஏற்படுதல்
2 Shares
Share via
Copy link
Powered by Social Snap