கடந்த நான்கு நாட்களில் போக்குவரத்து விபத்துக்களில் இரண்டு வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் இயக்குநர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், வேகம் மற்றும் போதுமான தூரத்தை கடைப்பிடிக்காத காரணாங்களால் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
அபுதாபி செல்லும் வழியே எமிரேட்ஸ் சாலையில் கடந்த திங்கட்கிழமை முதல் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று வாகனங்கள் கடும் சேதமைடைந்தன.
இந்த விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும், சிகிச்சைக்காக ரஷித் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் அல் மஸ்ரூயி தெரிவித்தார்.
மற்றொரு விபத்தில், துபாய் – ஹட்டா சாலையில் பைக் மற்றும் லாரி மோதியதில் பைக் ஓட்டுநர் உயிரிழந்தார்.
“இரு வாகன ஓட்டிகளும் வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்காததன் விளைவாக பைக் ஓட்டுநர் உயிரிந்தார்” என்று அல் மஸ்ரூயி கூறினார்.
ரமலான் மாதத்தில் முதல் 10 நாட்களில், போக்குவரத்து விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் 29 போக்குவரத்து விபத்துக்களில் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.