UAE Tamil Web

துபாயில் கடந்த ஆண்டு மட்டும் போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?

துபாய் போக்குவரத்தில் கடந்த ஆண்டு மட்டும் தினமும் 1.3 மில்லியன் பயணிகள் பயணித்ததாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA-வின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் துபாயில் 461 மில்லியன் பயணிகள் போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர். அதில் துபாய் மெட்ரோ, டிராம், பொதுப் பேருந்துகள், கடல் போக்குவரத்து பயணங்கள் மற்றும் டாக்ஸிகள் ஆகியவைகள் அடங்கியுள்ளன.

2020 இல் எண்ணிக்கைவிட 2021ஆம் ஆண்டில் பயணிகளின் போக்குவரத்து சுமார் 346 மில்லியனை எட்டியுள்ளது.

RTA -வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மத்தர் அல் தயர் கூறியதாவது, “கொரோனாவுக்கு பிறகு பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. துபாய் மெட்ரோ மற்றும் டாக்சிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய உயர்வை அடைந்துள்ளது. அதில் டாக்சிகளுக்கு 34 சதவீத பயணிகளும், துபாய் மெட்ரோவில் 33 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொதுப் போக்குவரத்துப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் பொதுப் பேருந்துகளின் பங்கு 25 சதவிகிதமாக உள்ளது” என்று அல் தயர் கூறினார்.

டிசம்பர் 2021 இல் 53 மில்லியன் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் 50 மில்லியன் பயணிகள் போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர். மீதமுள்ள ஒவ்வொரு மாதத்திலும் பயாணிகளின் எண்ணிக்கை 30 முதல் 48 மில்லியன் வரை எட்டியது.

2021 ஆம் ஆண்டில் ரெட் மற்றும் கிரீன் லைனில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை 151.3 மில்லியனை எட்டியது.

புர்ஜுமன் மற்றும் யூனியன் மெட்ரோ ஸ்டேஷன்களில் கடந்த ஆண்டு அதிக பயணிகள் பயணித்துள்ளனர். அதில் மட்டுமே சுமார் 8.8 மில்லியன் பயணிகள் புர்ஜுமன் ஸ்டேஷனின் ரெட் மற்றும் கிரீன் லைனை பயன்படுத்தினர். மேலும் யூனியன் ஸ்டேஷனை சுமார் 7.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியதாக RTA-வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மத்தர் அல் தயர் கூறினார்.

கடந்த ஆண்டு, டிராமில் 5.34 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். பொதுப் பேருந்துகளில் 116.3 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர்.

கடல்வழிப் போக்குவரத்தை 10.94 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

பகிரப்பட்ட போக்குவரத்தை 22.9 மில்லியன் பயணிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டாக்சிகளை 154.7 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர்.

துபாயில் பொது போக்குவரத்து ‘மக்களின் முதுகெலும்பாக மாறியுள்ளது’ என்று அல் தயர் தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link