UAE Tamil Web

அமீரகத்தில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபடுவோருக்கு 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம்..!

சமூக வலைதளத்தில் விபசாரத்திற்கு தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று அமீரக அரசின் பொது வழக்குத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமீரக அரசின் பொது வழக்குத் துறை டிவிட்டரில் கூறியதாவது: 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை சட்ட எண். 34 இன் பிரிவு எண். 33 இன் படி, சமூக வலைதளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விபச்சாரம், அவதூறு போன்ற செயல்களில் ஈடுபடுபவர் மற்றும் உதவுபவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் 25 ஆயிரம் திர்ஹம்ஸ் முதல் 1 லட்சம் திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும்.

இந்த சிறை தண்டனையானது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் விதிக்கப்படும். இல்லாவிட்டால் அதிகபட்சமாக 1 லட்சம் திர்ஹம்ஸ் குறையாமல் அபராதம் விதிக்கப்படும்.

சமூகத்தின் உறுப்பினர்களிடையே சட்ட கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், நாட்டின் சமீபத்திய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் பொது வழக்குத் துறை தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சட்ட அறிவிப்பை டிவிட்டரில் பதிவிட்டுள்ளது .

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap