UAE Tamil Web

அமீரகத்தில் அனுமதியின்றி அடுத்தவரை புகைப்படம் எடுத்தால் என்ன தண்டனை தெரியுமா..? விபரம் உள்ளே..!

அமீரகத்தில் விபத்தில் காயமடைந்தவர்கள், இறந்தவர்களை புகைப்படம் எடுப்பவருக்கு சைபர் கிரைம் சட்டத்தின்படி, 6 மாத சிறைத் தண்டனை அல்லது 150,000 திர்ஹம்ஸ் முதல் 5 லட்சம் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2, 2022 முதல் நடைமுறைக்கு வந்த புதிய சட்டம், விபத்து நடந்த இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள், வீடியோக்கள் எடுப்பது மற்றும் அத்தகைய படங்களை வலைதளங்களில் பதிவிடுவது, மற்றவர்களுக்கு அனுப்புவது போன்றவைகள் தடை செய்யப்பட்டதாகும்.

இது குறித்து வழக்கறிஞர் முகமது அல் நஜார் கூறுகையில், 2021 ஆம் ஆண்டின் சட்ட எண். 34 பிரிவு 44-இன் படி, இதுபோன்ற படங்கள் எடுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். உலகம் டிஜிட்டல் மு றையில் செயல்பட்டு வருவதால், விபத்துகளில் காயமடைந்தவர்கள், இறந்தவர்களின் படங்களை எடுப்பவர்கள் தண்டனைக்குட்படுத்தப் படுவார்கள்” என்று அல் நஜர் கூறினார்.

மக்களின் தனியுரிமையை மீறும் வகையில் மொபைல் போன்கள் அல்லது இணையதளங்கள் போன்ற தகவல்தொடர்பு வழிமுறைகளை பயன்படுத்துவது அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

பொது இடத்திலும், தனிப்பட்ட இடத்திலும் மற்றவர்களின் படங்களை அனுமதியின்றி எடுப்பது தனியுரிமையை மீறலாகும்.

படங்களை எடிட் செய்தல்:

புதிய சட்டத் திருத்தத்தின்படி, மொபைல் போன்கள், கணினிகள் அல்லது ஆன்லைன் மூலம் யாரேனும் ஒருவரின் படத்தைத் அனுமதியின்றி எடிட் செய்தால், அவதூறு வழக்கின்கீழ் வகையில் சட்டப்படி தண்டிக்கப்படும். அந்த நபருக்கு குறைந்தபட்சம் 1 வருடம் சிறை தண்டனை மற்றும் 250,000 திர்ஹம்ஸ் முதல் 500,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் அபராதங்கள் விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

உளவு பார்த்தல்:

“புதிய சட்டத்தின்படி, ஆன்லைனில் மற்றவர்களின் இருப்பிடங்களை அனுமதியின்றி கண்காணித்து அந்த இடங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் 50,000 திர்ஹம்ஸ் முதல் 500,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று அல் நஜர் தெரிவிதார்.

2 Shares
Share via
Copy link