UAE Tamil Web

அமீரகத்தில் பெண்களை மானபங்கப்படுத்தினால் என்ன தண்டனை தெரியுமா..? விபரம் உள்ளே..

அமீரகத்தில் பொது வெளியில்  பெண்ணை அநாகரீகமான வார்த்தைகள் அல்லது செயல்களால் துன்புறுத்துபவர்களுக்கு எதிரான தண்டனைச் சட்டம் குறித்து அமீரக அரசின் பொது வழக்குத் துறை விளக்கியுள்ளது.

இது குறித்து அமீரக அரசின் பொது வழக்குத் துறை டிவிட்டரில் கூறியதாவது: 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 31 இன் பிரிவு 412 இன் படி, இந்த விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வருடத்திற்கு குறையாமல் தடுப்புக் காவல் வழங்கப்படும் அல்லது 10 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

பொது வெளியில் வார்த்தைகள் அல்லது செயல்களால் ஒரு பெண்ணை அநாகரீகமான முறையில் துன்புறுத்தும் அனைவருக்கும் இந்த தண்டனைச் சட்டம் பொருந்தும்.

மேலும் பெண் போன்று மாறுவேடமிட்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நுழைவது அல்லது தடைசெய்யப்பட்ட இடத்தில் நுழைவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான இடத்தில் பெண்களைத் தவிர வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை. அத்தகைய சூழலில் ஒரு ஆண் இதுபோன்ற குற்றத்தைச் செய்தால் மோசமான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.

சமூகத்தின் உறுப்பினர்களிடையே சட்ட கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், நாட்டின் சமீபத்திய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் பொது வழக்குத் துறை தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சட்ட அறிவிப்பை டிவிட்டரில் பதிவிட்டுள்ளது .

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap