துபாயில் மருத்துவப் பிழை காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு 8 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்குமாறு ஒரு மருத்துவர் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விவரங்களின்படி, நோயாளி ஒருவர் முதுகுவலியால் அவதிப்படடு தனியார் மருத்துவமனைக்குச் வைத்தியத்திற்காக சென்றார், அங்கு ஒரு மருத்துவர் வலியைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த்தால், பாதிக்கப்பட்டவரின் நிலை மோசமடைந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மருத்துவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவருக்கு அந்த மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டதில் பல அபாயகரமான பிழைகளைக் கண்டறிந்தததாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அக்குழு கூறியது.
இந்த நிலையில் மருத்துவரும், அவர் பணிபுரிந்த தனியார் மருத்துவமனையும் இணைந்து இழப்பீட்டுத் தொகையாக 8 லட்சம் திர்ஹஸ் செலுத்தமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.