UAE Tamil Web

ரியல் ஹீரோக்களாக மாறிய குழந்தைகள் – அபுதாபி சுகாதாரத்துறை சல்யூட்!

கொரோனா நோயில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு ஏற்ற தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனை சோதனை செய்யும் முயற்சியில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. அமீரகத்தில் சினோஃபார்ம் தடுப்பூசிகளே பெரும்பாலும் போடப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் கொரோனாவால் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுவர் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், குழந்தைகளும் சினோஃபார்ம் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்தது.

COVID-19: 674 children in UAE participate in study to determine  effectiveness of Sinopharm vaccine | Uae – Gulf News
Credit : Gulf News

இதற்கான சோதனை முயற்சியாக அமீரகத்தில் உள்ள 900 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சினோஃபார்ம் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் அடங்குவர். தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகள் தொடர் கண்காணிப்பில் இருப்பர். நோய் எதிர்ப்பு திறன், உடல்நலம் உள்ளிட்டவற்றை மருத்துவ ஆராய்ச்சி குழு தொடர்ந்து கண்காணிக்கும். இந்த நிலையில் தன்னலம் கருதாமல் சோதனை முயற்சிக்கு முன்வந்த குழந்தைகளை அபுதாபி சுகாதாரத்துறை வெகுவாக பாராட்டி போற்றியுள்ளது. இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய குழந்தைகளின் பெற்றோருக்கும் சுகாதாரத்துறை நன்றி தெரிவித்துள்ளது. தடுப்பூசி பரிசோதனை முயற்சியில் ஆட்சியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும் பங்கெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

1 Share
Share via
Copy link