UAE Tamil Web

துபாயில் பொது இடங்களில் இதையெல்லாம் செய்தால் சிறை தண்டனை தான்..!

துபாயின் குற்றவியல் சட்டத்தின் கட்டமைப்பு ஷரியா சட்டம், இஸ்லாத்தின் மத மற்றும் தார்மீக நெறிமுறையாகும். ஷரியா பாலியல், குற்றங்கள், திருமணம், மதுபானம், சூதாட்டம், ஆடை அணிதல் போன்ற பிரச்சினைகளைக் கையாள்கிறது.

நீங்கள் உள்ளூராக இருந்தாலும், வெளிநாட்டவராக இருந்தாலும், சுற்றுலாப் பயணியாக இருந்தாலும், நீங்கள் இருக்கும் நாட்டின் அடிப்படை சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம்.

துபாயின் குற்றவியல் சட்டத்தின் பொது இடங்களுக்கான விதிகள் குறித்து பார்ப்போம்:

  • அனைத்து குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (கொடி, தேசிய சின்னம்) மற்றும் மதத்தின் சின்னங்களுக்கு மரியாதை காட்ட வேண்டும். இவை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், மீறுபவர்கள் அபராதம், சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்தல் மூலம் தண்டிக்கப்படுவார்கள்.
  • ஆடைக் குறியீடும் துபாய் குற்றவியல் சட்டத்தில் ஒரு பகுதியாகும். உடலை  அதிகமாக வெளிக்காட்டாமல், உடைகள் சரியான அளவுகளில் அணிய வேண்டும்.
  • புகை பிடித்தல் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், கடைகள் அல்லது அலுவலகங்களில் புகைபிடிக்க அனுமதி இல்லை.
  • அனுமதி இல்லாமல் மக்கள் புகைப்படங்கள் எடுத்து தடை. பெண்கள் மற்றும் குடும்பங்களின் புகைப்படங்களை அனுமதியின்றி எடுக்கக் கூடாது.
  • அவதூறான சைகைகள் மற்றும் தவறான நடத்தைகள் பொது குற்றமாக கருதப்படுகின்றன. இந்த சட்டத்தை மீறும் குற்றவாளிகளுக்கு அபராதம், நாடு கடத்தல் அல்லது சிறைத்தண்டனைக்கு உட்பட்டவர்கள்.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap