உலக மனித கடத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜூலை 30ம் தேதி மனித கடத்தலுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மனித கடத்தலை தடுப்பது, பாதிக்கப்பட்டோரை மீட்பது உள்ளிட்டவைகள் குறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதனையொட்டி மனித கடத்தலால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் வகையில் அமீரகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் மனித கடத்தலுக்கு ஆளானோர் அல்லது அவர்களுக்கு தொடர்புடையோரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிரக் கூடாது. மீறினால் குற்றமிழைத்தோருக்கு 10,000 திர்ஹம் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
