இது போன்ற மோசடிகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீஸ்.!

Sextortion Scams in UAE

இணையதளத்தில் பலவகை மோசடிகளை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இது கொஞ்சம் புதுவிதமான மோசடி. ஆம், தற்போது இது அமீரகத்தில் அதிகமாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.

என்ன வகை மோசடி?

சாதாரணமாக நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மின்னஞ்சல்(Email) முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வரும்.

அந்த மின்னஞ்சலில் “நீங்கள் ஆபாச படங்கள் பார்த்ததை நான் பதிவுசெய்து வைத்துள்ளேன். மேலும், உங்கள் கணினியில் இருக்கும் உங்களின் முக்கிய ஆவணங்கள், தொடர்புகள் மற்றும் சில தகவல்கள் என்னிடம் உள்ளது. எனவே, இந்த தகவலை “நான் மற்றவர்களிடம் பகிராமல் இருக்க அல்லது என்னிடம் இருக்கும் அந்த தகவலை அழிக்க(Delete) எனக்கு நீங்கள் Bitcoin(பிட்காயின்) மூலம் உடனே பணம் அனுப்புங்கள்” என்பது போல வரும்.

சில நேரங்களில் நீங்கள் சில இணையதளங்களில் பயன்படுத்திய “Password” கூட வரலாம். இது “Webcam Blackmail” அல்லது “Sextortion Scam” என்று அழைக்கப்படும் மோசடி முறை ஆகும்.

பொதுவாக இது போன்ற மோசடி மின்னஞ்சல்கள் உங்கள் மின்னஞ்சலில் இருக்கும் “Spam Folder”-ல் வரும். சில நேரங்களில் “Inbox Folder”க்கும் கூட வரலாம்.

எப்படி கையாள்வது?

இது போன்ற மின்னஞசள் உங்களுக்கு வந்தால், பயம்கொள்ள வேண்டாம். கீழே குறிப்பிட்டதை போல செய்தால் இந்த மோசடியில் சிக்கி கொள்ளாமல் தவிர்க்கலாம்.

  • மோசடி மின்னஞ்சலை திறக்காமல்(Open) இருங்கள் அல்லது மின்னஞ்சலை உடனே அழித்துவிடுங்கள்(Delete).
  • மோசடி மின்னஞ்சலில் ஏதேனும் “(Link) லிங்க்” இருந்தால் தயவு செய்து அதை கிளிக் செய்து விட வேண்டாம். ஏனென்றால், அந்த லிங்க் மூலம் உங்கள் கணினியில்/மொபைலில் வைரஸ் செலுத்தி உங்களை நோட்டமிடுவார்கள்.
  • மோசடி மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பாதீர்கள்.
  • மோசடி மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கும் “Bitcoin” முகவரிக்கு பணத்தை அனுப்ப வேண்டாம்.

இது போன்ற மோசடி மின்னஞ்சல்கள் அமீரகத்தில் மட்டுமன்றி பல நாடுகளில் தற்போது அதிகமாக வலம்வந்து கொண்டு இருக்கிறது என்று அபுதாபி போலீஸ் சைபர் கிரைம் – குற்றவியல் புலனாய்வு பொதுத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இது போன்ற மோசடிகளால் சுமார் 51,146 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், $83 மில்லியன் டாலர் பணமும் மொத்தமாக பலர் இழந்துள்ளனர் என்று Federal Bureau of Investigation(FBI) தகவல் வெளியிட்டுள்ளது.

Loading...