அமீரகத்தில் இடி, மின்னலுடன் கனமழை; மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு நெருக்கடி நிலை ஆணையம் எச்சரிக்கை.!

Don’t use your mobile phones during thunderstorms, warns UAE Crisis Authority (Photo: GulfNews)

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் உங்கள் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஐக்கிய அரபு அமீரக அவசர நெருக்கடி நிலை ஆணையம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது குடியிருப்பாளர்கள் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று, தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஞாயிற்றுக்கிழமை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியதையடுத்து இந்த தொடர் ஆலோசனை செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடுமையான மழை, மின்னல் மற்றும் இடி ஆகியவை நேற்று சனிக்கிழமை இரவு முதல் ஷார்ஜா, ராஸ் அல் கைமா, துபாய் மற்றும் உம் அல் குவைனின் பல்வேறு பகுதிகளை பாதித்துள்ளன. இது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தொடருகிறது.

நீங்கள் விரும்பினால் மொபைல் அல்லது லேண்ட்லைன் தொலைபேசிகளை வீட்டிற்குள்/ அலுவலகத்துக்குள் பயன்படுத்தலாம், ஏனெனில் அது உங்களுக்கு பாதுகாப்பானது. ஆனால் மொபைல் போன்களை வெளி பகுதியில் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் ”என்று ஆணையம் கூறியுள்ளது.