ஷார்ஜவில் டிரைவ்-த்ரூ கொரோனா பரிசோதனை திறக்கப்பட்டுள்ளதாக முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “புதிய டிரைவ்-த்ரூ மையம், பொதுமக்களுக்கு நேரத்தை எளிதாக்கவும் விரைவாக்கவும் உதவு செய்யும். இந்த பரிசோதனையை 50 திர்ஹம்ஸ் கட்டணத்தில் 6 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளாலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை பரிசோதனை மையம் திறக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஷார்ஜாவின் மற்ற கொரோனா பரிசோதனை மையங்களில் வேலை அழுத்தத்தை குறைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த டிரைவ்-த்ரூ மையத்தில் வாகன நுழையவும் , வெளியேறவும் சிறாப்பான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.