UAE Tamil Web

துபாயில் மருத்துவமனையில் 60 ஆயிரம் திர்ஹம்ஸ் திருடி சூதாட்டத்தில் இழந்த டிரைவர் கைது

துபாயில் அரசு மருத்துவனமையில் 60 ஆயிரம் திர்ஹம்ஸ் திருடி, சூதாட்டத்தில் ஈடுபடுத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு 5 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதம் செலுத்துமாறும், சிறைத் தண்டனைக்குப் பிறகு அவரை நாட்டை விட்டு நாடு கடத்துமாறும் காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல்துறை அறிக்கையின்படி, அரசு மருத்துவமனையின் கணக்காளரரிடம் 60 ஆயிரம் திர்ஹம்ஸ் தொகையை கொடுத்துவிடுமாறு மருத்துவமனை டிரைவரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த டிரைவர் பணத்தை கணக்காளரரிடம் வழங்காமல் சூதாட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

பணம் கிடைத்துவிட்டதா என்பதை உறுதி செய்வதற்காக கணக்காளரைத் தொடர்பு கொண்டபோது, அவர் எதிர்மறையாக தெரிவித்தார். டிரைவரும் அவரது மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதால் சந்தேகத்தின்பேரில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த பணம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இரண்டு மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான தொகை என்று விசாரனையில் தெரியவந்தது.

இதனை அடுத்து, பணத்தை சூதாட்டத்தில் பயன்படுத்திய போது கையும் களவுமாக ஓட்டுநரை போலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பணம் மூழுவதையும் சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap