UAE Tamil Web

உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தபோகும் துபாய்.. விரைவில் டிரைவர் இல்லாத டாக்சிகள் அறிமுகம்..!

துபாயில் குரூஸ் எனும் உயர்தர டாக்சிகள் விரைவில் கொண்டுவரப்படும் என துபாயின் போக்குவரத்து ஆணையமான RTA, அமெரிக்க நிறுவனமான குரூஸுடன் இட்ட ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளது.

உலகளாவிய நிறுவனமான KPMG-இன் ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் உலகின் தலைசிறந்த நாடுகளில் உள்ளது. அந்த வரிசையில் அமீரகமும் உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வாகனம் அடுத்த ஆண்டு துபாய் சாலைகளில் இயங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டிரைவர் இல்லாத வாகனம் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்து அமீரக மக்கள் சற்று பிரமிப்பு அடைவர்.

RTA அறிக்கையின்படி, டிரைவர் இல்லாத வாகனங்களுக்குத் தேவையான டிஜிட்டல் வரைபடங்கள், சோதனைகள் மற்றும் தயாரிப்புகள் என அனைத்தும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும்.

Supplied

துபாயில் வசிப்பவர்கள் இந்த ஓட்டுநர் இல்லாத டாக்சிகளைப் பயன்படுத்துவது எப்போது?

2023 ஆம் ஆண்டில் அமீரகத்தில் ஓட்டுநர் இல்லாத டாக்சிகளை வெளியிட RTA திட்டமிட்டுள்ளது, மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஓட்டுநர் இல்லாத வண்டிகளின் எண்ணிக்கை 4,000ஐ எட்டும். அமெரிக்காவிற்கு அடுத்து இதுபோன்ற வாகனங்களை கொண்ட முதல் நகரமாக துபாய் திகழும்.

துபாய் ஏன் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை வெளியிடுகிறது?

ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பளிக்காது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதியான சேவை செய்ய முடியும். 90 சதவீதத்துக்கும் அதிகமான சாலை விபத்துக்களுக்கு மனிதனால் ஏற்படுகிறது. ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பை அதிகப்படுத்தும். குரூஸின் ஓட்டுநர் இல்லாத கார்கள் விபத்துக்கள், சாலை நெரிசல் மற்றும் பார்க்கிங்கின்போது இடையூறு போன்றவற்றை ஏற்படுத்தாது.

Cruise autonomous vehicle in San Fransisco. Photo: Cruise Company Media resources

துபாயில் குரூஸ் எனும் ஓட்டுநர் இல்லாத கார் எவ்வாறு செயல்படும்?

குரூஸ் துபாயில் ஒரு புதிய நிறுவனத்தை தொடங்க உள்ளது. அதற்கான செயல்பாடு மற்றும் பராமரிப்புகள் முழுவீச்சில் தீவிரமாக செயல்படும்.

குரூஸ் எப்போது, எங்கு நிறுவப்பட்டது?

க்ரூஸ், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், செப்டம்பர் 2013 இல் கைல் வோக்ட் என்பவர் உறுவாக்கினார். 2016 ஆம் ஆண்டில், அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் குரூஸைக் கைப்பற்றியது. 2021 ஆம் ஆண்டில், க்ரூஸுக்காக, மைக்ரோசாப்ட், ஜி.எம், ஹோண்டா, வால்மார்ட் மற்றும் பல நிறுவன முதலீட்டாளர்கள் புதிய பங்குகளில் $2.75 பில்லியன் முதலீடு செய்தனர், இதனால் குரூஸின் மதிப்பு $30 பில்லியன் உச்சத்தை எட்டியது.

Cruise autonomous vehicle in San Fransisco. Photo: Cruise Company Media resources

குரூஸின் முதல் ஓட்டுநர் இல்லாத பயணம் எப்போது, எங்கு?

வாகனத்தின் உள்ளே, அனைத்து வகையான தகவல்களையும் பெற முடியும். பயணிகளுக்கு அனைத்து கதவுகளையும் மூடவும், சீட் பெல்ட்களை அணியவும் என வாகந கட்டுப்பாடுகளுக்கு தேவையான அனைத்தை குறிப்புகளையும் நினைவூட்டும். வாகனத்தில் இருக்கும் பட்டங்களை அழுத்துவதன் மூலம் பயணத்தை மேற்கொள்ளலாம்.

அவசரமாக பயணிகள் பயணத்தை முடிக்க விரும்புபவர்கள் மற்றோரு பட்டனை பயன்படுத்தலாம். பயணத்தின் முடிவில் வாகனத்தில் பொருளை மறந்துவிட்டால், துணைப் பணியாளர்கள் பயணிகளை தொடர்பு கொள்ளலாம். இது போன்று ஏனைய வசிதகள் இந்த க்ரூஸ் வாகனத்தில் உள்ளது.

இந்த வாகனங்கள் எவ்வாறு இயங்குகின்றன?

இந்த புதிய போக்குவரத்து முறை 5G தொழில்நுட்பத்துடன் இயங்கும், இதன் இயந்திரங்களின் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளலாம். ஓட்டுநர் இல்லாத இந்த கார்கள், ஆபத்தான சாலைகளிலிருந்தும், பாதுகாப்பற்ற சூழ்நிலையைத் தவிர்ந்தும் பயணத்தை மேற்கொள்ளும்.

குரூஸ் கார்களில் ஐந்து உயர் துல்லியமான லேசர் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை நிலையான பொருட்களையும், நகரும் பொருட்களையும் கண்டறியும் திறன் வாய்ந்தது. 16 கேமராக்கள் மற்றும் 21 ரேடார்கள் என பாதுகாப்பான கட்டுப்பாடுகள் இதில் உள்ளது.

மழை அல்லது மூடுபனி காரணமாக ஒரு சாலையில் செல்வது கடினமாக இருந்தால் அதற்கேற்ப செயல்திறனையும் மேற்கொண்டு பயணத்தை இலகுவாக்கும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap