ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஓட்டுநர் உரிமம் பெறுவது பெரும்பாலான வெளிநாட்டினரின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஏனென்றால் டிரைவர்களுக்கு அரபு நாட்டில் சம்பளம் அதிகம். எனவே நம் நாட்டில் இருக்கும் பெரும்பாலான டிரைவர்களின் விருப்பம் அரபு நாட்டில் வேலை செய்வதாகவே இருக்கும்.
ஆனால் இங்கு டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது என்பது நம் நாட்டில் எடுப்பது போல எளிமையானது அல்ல. பல்வேறு பரீட்சைகள் மற்றும் பல்வேறு டெஸ்டுகளுக்கு பின்னரே ஓட்டுநர் உரிமமானது கொடுக்கப்படும்.
பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு பல சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்டின் உரிமம் வைத்திருப்பவர்கள் அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு நாட்டில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில்,உள்துறை அமைச்சகம் (MoI) ஓட்டுநர் உரிமங்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு சேவையை வழங்க முன் வந்துள்ளது. இதன் மூலம் விசிட்டராக வந்தவர்கள் கூட தங்களுடைய தேசிய ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்ட முடியும்.
மேலும் இந்நாட்டின் குடியிருப்பு அனுமதி வைத்திருந்தால் UAE உரிமத்துடன் அதை மாற்றிக்கொள்ளும் உரிமையை இது வழங்குகிறது.
MoI இன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, இந்த 43 நாடுகளைச் சேர்ந்த உரிமம் பெற்றவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து UAE உரிமத்திற்காக ஓட்டுநர் உரிமத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்:
- Estonia
- Albania
- Portugal
- China
- Hungary
- Greece
- Ukraine
- Bulgaria
- Slovak
- Slovenia
- Serbia
- Cyprus
- Latvia
- Luxembourg
- Lithuania
- Malta
- Iceland
- Montenegro
- United State of America
- France
- Japan
- Belgium
- Switzerland
- Germany
- Italy
- Sweden
- Ireland
- Spain
- Norway
- New Zealand
- Romania
- Singapore
- Hong Kong
- Netherlands
- Denmark
- Austria
- Finland
- United Kingdom
- Turkey
- Canada
- Poland
- South Africa
- Australia
இதில் இந்திய நாடு இடம் பெறாதது வருத்தத்துக்குரிய விஷயம் என்றாலும் அங்கு டிரைவராக பணிபுரியும் பெரும்பாலானவர்கள் நம் நாட்டினை சேர்ந்தவர்களே என்பது மறக்க முடியாத உண்மை. தன் திறமையின் மூலம் அரபு நாட்டு பரீட்சையில் பாஸ் ஆகி அங்கு வாகன டெஸ்ட் முடித்து வெற்றிகரமாக டிரைவராக வேலை பார்ப்பவர்கள் நம் இந்தியர்கள்.
எனவே அவர்களுக்கு இந்த செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்காது என்றாலும் மற்ற 43 நாடுகளின் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அரபு நாட்டில் வாகனம் ஓட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்.