UAE Tamil Web

இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ட்ரோன்களை கொண்டு கண்காணிக்கப் போகிறது துபாய் காவல்துறை!

உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது துபாய். லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் துபாயின் பாதுகாப்பு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. துபாய் நகரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் தற்போது புதிதாக இணைந்துள்ளது ட்ரோன் கேமராக்கள். கொரோனா ஊரடங்கின் போது பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கேமராக்கள் வெளியில் சுற்றித்திரிபவர்களை அடையாளம் காண பெரிதும் உதவியது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைப்பு காட்டியுள்ளனர்.

Drones take off in UAE - News | Khaleej Times
Credit : Khaleej TImes

Quadcopters எனப்படும் நவீன வகை ட்ரோன் கேமராக்கள் இஸ்ரேலின் Airobotics எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பாதுகாப்பு கருவிகளானது Expo 2020 ல் அறிமுகமாக உள்ளது. இந்த நவீன வகை ட்ரோன் கேமராக்கள் மூலம் துபாயில் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். போக்குவரத்து நெரிசல், குற்ற செயல்கள் போன்றவற்றை இதனை கொண்டு தடுக்க முடியும். சந்தேகத்திற்கிடமான நபர்களை துல்லியமாக கேமராக்கள் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும்.

Image
Credit : Khaleej TImes

தேவைப்படும் பட்சத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் மனிதர்களை பின்தொடர்ந்து தகவல்களை சேகரிக்கும். மேலும் இந்த ட்ரோன் கேமராக்களை கொண்டு அவசரகால உதவிக்கான நேரத்தை (Emergency response time of the police) 4.40 நிமிடத்தில் நிமிடங்களில் இருந்து ஒரு நிமிடமாக குறைக்கலாம். துபாய் காவல்துறையின் தலைமையகத்தில் இந்த செயல்பாடுகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு செய்த அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் Quadcopters எனும் நவீன வகை ட்ரோன் கேமராக்கள் மூலம் குற்றங்களை குறைக்க முடியும் என தெரிவித்தார்.

Image
Credit : Khaleej TImes

எதிர்வரும் Expo 2020ல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்படும் எனவும் அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுத்தப்படும் இந்த கண்காணிப்பு திட்டத்தின் மூலம் துபாயின் பாதுகாப்பு மேலும் உறுதியாகும் என்றே நம்பலாம்.

19 Shares
Share via
Copy link
Powered by Social Snap