UAE Tamil Web

36 இடங்களில் கத்திக்குத்து ; போதை வெறியில் அப்பாவைக் கொன்ற மகனுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்கிய நீதிமன்றம்..!

kitchen-knife-

போதை மருந்து வாங்க முடியாததால் ஆத்திரத்தில் தனது தந்தையே கொன்ற இளம் வயது ஏமிராட்டி ஆணுக்கு அல் அய்ன் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கிறது.

ஏற்கனவே போதைப் பொருள் பயன்பாட்டிற்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளி, தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்தியிருக்கிறார். அவரும் பணம் அளித்த போதிலும் சில நேரங்களில் பணம் கொடுக்க மறுத்துவிடுவார் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அப்படி ஒருநாள் பணம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்த தந்தையை கண்மூடித்தனமாக கத்தியால் குத்த ஆரம்பித்திருக்கிறார் குரூர மகன். தந்தையின் உடலில் 36 முறை கத்தியால் குத்தியதால் அந்த இடமே இரத்தச் சகதியாகியிருக்கிறது.

இதனை மாடியிலிருந்து பார்த்த குற்றவாளியின் சகோதரர், ஓடிச்சென்று காரை எடுத்துக்கொண்டு தனது தந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல நினைத்திருக்கிறார். இதனையறிந்த குற்றவாளி அவரது காரினை உடைத்து நகர முடியாமல் செய்திருக்கிறார்.

உடனே அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த காவல்துறை குற்றவாளியை சுற்றிவளைத்தது. வழக்கு விசாரணையின்போது குற்றவாளி திட்டமிட்டே அவரது தந்தையைக் கொன்றது ஊர்ஜிதமானதால் அவருக்கு மரண தண்டனை வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

kitchen-knife-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap