போலீஸ் வாகனத்தை தாக்கிவிட்டு “குடிபோதையில் எனக்கு தெரியவில்லை” என்று கூறிய அரேபியர்…

ராஸ் அல் கைமாவில் போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசியது மற்றும் போலீஸாரின் வாகனத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒருவர் கைது.

போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அரேபியர் ஒருவர் ராஸ் அல் கைமா போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசி அவமதித்தும் உள்ளார், என்று எமரெட் அல் யூம் ரிபோர்ட் கூறியுள்ளது.

இதனை அடுத்து அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன் ‘எனக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. மேலும், சம்பவத்தின் போது தான் குடிபோதையில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும், என் மீது அதிக கருணை காட்ட வேண்டும் என்று நீதி மன்றத்தை கேட்டு கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் UAE வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Khaleej Times

Loading...